Sunday, December 4, 2011

தமிழகம்



தமிழகம்

தண்ணீரால் ஓடும் கார் கண்டுபிடிப்பு

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக வேறு தொழில்நுட்பத்தில் இயங்கும் காரை கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) வேதியியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் பி.விஸ்வநாதனின் திட்ட வடிவில், தண்ணீரால் ஓடும் காரை ஆர்.எம்.என். தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஓராண்டு தீவிர முயற்சிக்குப் பின் இந்தக் கண்டுபிடிப்பு சாத்தியமாகி உள்ளது. வெறும் தண்ணீரை மட்டும் கொண்டு காரை இயக்க முடியாது. தண்ணீருடன் சில வேதிப்பொருள்களை சேர்ப்பதின் மூலம் ஹைட்ரஜன் கிடைக்கிறது. இந்த ஹைட்ரஜன் மூலம் காரை இயக்குவது சாத்தியமாகி உள்ளது. இது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காது.

இந்தியாவுக்கு அதிநவீன ராணுவ தாளவடங்கள்

இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது இஸ்ரேல். அண்மைக்காலமாக இருநாடுகளுக் கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. அத்தோடு இஸ்ரேல் தளவாடங்களை யும், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிடு வதில் இஸ்ரேலின் அனுபவத்தையும் பெற இந்தியா விரும்புகிறது. மேலும் புதிதாக ஏற்பட் டுள்ள உடன்பாட்டின்படி கடலோரப் பாது காப்பை வலுப்படுத்தவும் எதிரிகளின் விமானங் களை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுத்து அழிக்கும் ரேடார்களை இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. மும்பைத் தாக்குதலை அடுத்து கடல் வழி மற்றும் வான்வழித் தாக்குதலைத் தடுக்க ரேடார் அமைப்புகளை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கு இஸ்ரே லின் ‘ஏரோஸ்டாட்’ ரேடார்களை இந்தியா வாங்க உள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஷெட்

சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2009-—10---ம் நிதி யாண்டில் ரூ.1,614 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் புதிய வரிகள் இல்லை. பற்றாக்குறை ரூ.1.14 கோடியாகும். இந்த நிதியாண்டில் மொத்த வரவு ரூ.1613.24 கோடி, மொத்த செலவு ரூ.1614.38 கோடி, பற்றாக்குறை ரூ.1.14 கோடி ஆகும்.

மூன்று புதிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரோ விஞ்ஞானிகள் பூமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்று புதிய வகை பாக்டீரியாக்களை பூமியின் மேல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோ கடந்த 2005--ல் 459 எடை கொண்ட பலூன் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக பூமிக்கு மேல் 20 முதல் 41 கிமீ., வரையிலான தூரத்தில் நிறுத்தியது. பின்னர் அந்த பலூன் பாராசூட் மூலம் பூமிக்கு வந்தது. அதில் ஒட்டியிருந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய செல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மாலிகுலர் அறிவியல் மையத்தில் வைத்து ஆராயப்பட்டது. இந்த ஆராய்ச்சின் முடிவில் இதுவரை பூமியில் அறியப்படாத மூன்று பாக்டீரியாக்கள் விண் வெளியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. பூமிக்கு மேல் 40 கிமீ., தூரத்தில் புற ஊதா கதிர்களிலில் இருந்து தப்பி உயிர் வாழ்வது என்பது எந்த உயிரினத்துக்கும் இய லாத காரியம் என்பதால் இந்த பாக்டீரியக்கள் விண்வெளியின் வேறு பகுதியிலிருந்து வந்திருக் கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மூன்று பாக்டீரியாக்களில் ஒன்றுக்கு பாசில்லஸ் இஸ்ரோனேன்சிஸ் என இஸ்ரோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றொன்றுக்கு பாசில்லஸ் ஆர்யபட்டா என இந்திய வானசாஸ்திர முன்னோடி ஆர்யபட்டாவின் பெயர் கொடுக்கப்பட்டுள் ளது. மூன்றாவது பாக்டீரியாவுக்கு ஜேனிபாக் டர் ஹோய்லை என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாக்டீரியாக்கள் முன்பு பூமியில் உள்ள எரிமலை பகுதிகளில் வசித்திருக் கலாம். அவை எரிமலை வெடிப்பின்போது துகள் களுடன் சேர்ந்து விண்ணில் பறந்திருக்கலாம். பின்னர் அது அங்குள்ள சூழலுக்கு வாழ பழகி கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment