Sunday, December 4, 2011

தேசம





மலேசிய நாட்டில் இந்திய பல்கலைக்கழகம்

இந்திய பல்கலைக்கழகங்களின் கூட் டமைப்பு மலேசியாவில் ஒரு சர்வதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைக்க வுள்ளது. மலேசியாவில் உள்ள மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான பெராக் பகுதியில் இப்பல்கலைக்கழகம் கட்டப்படுகிறது. ஐந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து ஒருங் கிணைந்த பல்கலைக்கழகத்தை இங்கு உரு வாக்குகின்றன. சென்னை பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஹைதராபாத், சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக் கழகம், பெல்காமில் உள்ள கோல்டு பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இந்த பல் கலையை உருவாக்குகின்றன. சுமார் ரூ.540 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இந்தப் பல்கலையின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும். மேலும் இதன் மூலம் இரு நாடுகளும் கூட்டாக கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடு படவும் தவிர மருத்துத் துறையில் இருநாட்டு மாணவர்களும் பயனடையும் வகையில் பயிற்சிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- _ பிலிப்பைன்ஸ் இடையே உடன்பாடு

இந்தியா-பிலிப்பைன்ஸ் இடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதற்காக கூட்டு ஆணையம் ஒன்றை அமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. ஆண்டுக்கு இருமுறை கூடும் இந்த ஆணையம், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தும். இதில் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள். மேலும் இருநாடுகளுக்கும் இடையே ஏற்றமதி, இறக்குமதியாகும பொருள்களின் பட்டியலை இறுதி செய்யும் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று இந்திய வர்த்தக கழகம் மற்றும் பிலிப்பைன்ஸ் சர்வதேச வர்த்தக கழகம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது. ஆய்வு, வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் மாற்று எரிசக்தி ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்தவும் இருதரப்பும் சம்மதித்தன. இது தவிர, சுகாதாரம் மற்றும் மருந்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே ஒப்பந்தம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே வேளாண் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. வேளாண் துறையில் இந்த இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி வேளாண் விரிவாக்கம், நிலம், நீர் ஆகியவற்றில் மேலாண்மை மற்றும் பாது காப்பு, வேளாண் பொருள் வர்த்தகத்தை ஊக்குவித்தல், வேளாண் துறையில் முதலீடு, கால்நடைகள் பராமரிப்பு, மீன் வளம் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

No comments:

Post a Comment