Sunday, December 4, 2011

சர்வதேசம்




ரஷ்யா ஏவுகணை சோதனை

தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக் கைத் தாக்கும் பழமையான ஆர்.எஸ்.-18 ரக ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. 105 டன் எடையும், 80 அடி உயரமும் கொண்ட இந்த ஏவுகணை சுமார் 9 ஆயிரத்து 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கவல்லது. இந்த ரக ஏவு கணைகள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவற்றைத் தொடர்ந்து ராணுவத்தில் பயன்படுத்தலாமா என்பதை முடிவு செய்வதற்காகவே ரஷ்யா இந்தச் சோதனையை நடத்தியது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை கம்சத்கா தீபகற்பத்தில் இருந்த இலக்கை சரியாகத் தாக்கியது. பழமையான ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற சோதனைகளை ரஷ்யா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் மாயமான தீவுகள்

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு களால் இதுவரை 30 தீவுகள் மறைந்து விட்டன. தீவுகளின் கூட்டம் என்றழைக்கப் படும் இந்தோனேசிய நாட்டில் மொத்தம் 17,504 தீவுகள் இருந்தன. அந்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் இயற்கை சீற்றங்களினால் தற்போது 17,480 தீவுகள் மட்டுமே உள்ளன. இவையனைத்தும் சுனாமி, நிலநடுக்கம், கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களினால் அழிந்தன. மேலும் தீவுகள் அழிவதைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 2030-—க்குள் 3000 தீவுகள் மறையும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிரகத்தின் சந்திரனுக்கும் வளையங்கள்

சனிக்கிரகத்தைச் சுற்றிலும் வளையங்கள் இருக்கின்றன. அதே போல சந்திரன்களில் ஒன்றான ரியாவுக்கும் அதைச் சுற்றிலும் வளையங்கள் உள்ளன. இதை நாசாவின் காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. ரியா சனிக்கிரகத்தின் 2-—வது பெரிய சந்திரன் ஆகும். இதன் விட்டம் 1500 கிலோமீட்டர். நீண்ட காலத்துக்கு முன்பு வால் நட்சத் திரங்கள் மோதிக் கொண்டதால் அதிலிருந்து வெளியான வாயுவும், திடப் பொருள்களும் சேர்ந்து தான் இப்படி வளையங்களாக உருவாகியுள்ளன என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் அமைச்சர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகை யாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை வெளி யேற்றுவதை ஒவ்வொரு நாடும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மேலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது பனியாறுகள் சுருங்கி, குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் எனவும் சீனாவில் வெப்பம் மற்றும் வறட்சி அதிகரிக்கும் எனவும், கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளை சூறைக்காற்றுகள் அடிக்கடித் தாக்கும் என வும் மாநாட்டில் அறிக்கை வெளியிடப் பட்டது. இந்த அறிக்கையை ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.

உலகின் மிகச் சிறந்த நகரம்

உலகின் மிகச் சிறந்த நகரமாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் சிறந்த நகரங்களை கண்டறிய மோனோகிள் என்ற பத்திரிகை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் தரமான வாழ்க்கை முறை, மிகப்பெரிய அளவிலான போக்குவரத்து முறை, உணவகங்கள், சுற்றுச் சூழல், நவீன டிசைன் சென்டர்கள் உள்பட பல அம்சங்களில் டென்மார்க் நாட்டின் தலை நகர் கோபன்ஹேகன் உலகிலேயே சிறந்த நகரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய நகரங்களாக கருதப்படும் லண்டன் மற்றும் நியூயார்க், சிறந்த முதல் 20 நகரங்கள் பட்டியலில் கூட இடம் பெறவில்லை .

No comments:

Post a Comment