அங்குமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் அடைந்தார். அவரது மகன் சுனில் உடனிருந்தார்.
1946ம் ஆண்டு ‘ஹம் ஏக் ஹெயின்Õ படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். ‘ஜித்திÕ என்ற படம் 1947ம் ஆண்டு ரிலீஸானது. அது சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து முன்னணி நடிகரானார். ‘பேயிங் கெஸ்ட்Õ, ‘பாஸிÕ, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணாÕ, ‘தேஸ் பரதேஸ்Õ உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் நடித்த ‘கைட்Õ என்ற படம் வெளிநாட்டு படங்களுக்கான போட்டி பிரிவில் ஆஸ்கர் போட்டிக்காக அனுப்பப்பட்டது. 2001ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2002ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றார். பட நிறுவனம் தொடங்கி 35க்கும் அதிகமான படங்களை தயாரித்தார். பல படங¢களை இயக்கியுள்ளார்.
1950களில் ஏராளமான காதல் கதை படங்களில் நடித்து புகழ்பெற்றதால் காதல் மன்னன் என புகழ்பெற்றார். படங்களில் இவரது வித்தியாசமான வசன உச்சரிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து வெள்ளி விழா படங்களை தந்ததால் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.
No comments:
Post a Comment