Monday, December 12, 2011

பருவநிலை மாற்றம்: 2015-க்குள் ஒப்பந்தம்

 பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை 2015-க்குள் மேற்கொள்ள டர்பனில் நடைபெற்ற மாநாட்டில் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் 2020-லிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது நடைமுறையில் உள்ளது "கியோட்டோ ஒப்பந்தம்'. 2008-ல் இருந்து 2012-க்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்கு குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப்பட்டது. இந்த அளவானது 1990-க்கும் முன்பிருந்த நிலையாகும். இதன்படி "பசுமை இல்ல வாயுவை' (கார்பன் டை ஆக்ûஸடு) அதிகம் வெளியிடும் நாடுகள் இந்த அளவை எட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


 புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 194 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமையே முடிய வேண்டிய இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு காரணமாக 36 மணி நேரம் தாமதமாக முடிவுற்றது.
 இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளே, பசுமை இல்ல வாயுவை அதிகளவு வெளியிடுவதாகவும், இந்நாடுகள்தான் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்து. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவும். சீனாவும், புதிய கட்டுப்பாடுகளினால் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்க நேரிடும் என்றன.


 இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஐரோப்பிய யூனியன் தெரிவிக்கும் திட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் என்ன என்பது தெரியாமலே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை எங்கள் நாட்டினால் பணயம் வைக்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் தங்களைப் பிணையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைவருக்கும் சமமானதே என்றும் அவர் தெரிவித்தார். தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட, வளரும் நாடுகளின் பொறுப்புணர்ச்சி இவ்விஷயத்தில் குறைவு என்ற வாதத்தையும் அவர் நிராகரித்தார். சனிக்கிழமை இரவு வரை இந்த விவாதம் நீடித்ததால், மாநாட்டின் தலைவரும், தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மெய்டே நொகானா-மஷாபேன் 10 நிமிட இடைவேளையை அறிவித்தார்.


 இந்த இடைவேளையில் ஐரோப்பிய யூனியனின் ஆணையர் கோனி ஹெடிகார்டு மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஓர் சமரச முடிவை எட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சு நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பினரும் 2015-க்குள் ஓர் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர். மேலும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கென ஏழை நாடுகளுக்கு நிதியளிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவரை கியோட்டோ ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது.


 இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பிரதிநிதிகளின் தலைவர் ஸி ùஸன்ஹுவா,
 அமையவுள்ள ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் விதிகளின்படியே அமையும் என்று தெரிவித்தார்.


 இந்தியாவின் கருத்துகள் குறித்துத் தெரிவித்த ஐரோப்பிய யூனியன் ஆணையர் ஹெடிகார்டு, தனது பொருளாதாரத்துக்கு ஆபத்தான முடிவை எடுக்கும்படி இந்தியாவைத் தாங்கள் வலியுறுத்தவில்லை என்றும், அந்நாட்டின் வளர்ச்சியை முழுமையாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.
 அதே சமயம் ஒப்பந்தம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் உள்ள 7 மாடி தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து : 40 பேர் கருகி பலி..

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் 7 மாடி கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் கருகி பலியாயினர். முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்ட கட்டிடம் என்பதால் மளமளவென பரவும் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். கொல்கத்தாவின் டாகுரியா பகுதியில் ‘அம்ரி ஹாஸ்பிடல்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. மேற்கு வங்கத்தில் பிரபலமான இமாமி மற்றும் சாச்சி தொழில்நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவான மருத்துவமனை இது. இந்த மருத்துவமனையில் பிரதான கட்டிடமும் அதையொட்டி 7 மாடி அனெக்ஸ் கட்டிடமும் உள்ளது. 7 மாடி அனெக்ஸ் கட்டிடம் முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்டது. இங்கு ஐசியூ, ஐசிசியூ, ஐடியூ மற்றும் கிரிடிக்கல் கேர் யூனிட் என உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவுகள் உள்ளன. 

இந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் சென்ட்ரலைஸ்டு ஏசி மெஷின்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இன்று அதிகாலை இந்த தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. சம்பவம் நடந்த போது ஏசி கட்டுப்பாட்டு அறையில் யாரும் இல்லாத காரணத்தால் தீப்பிடித்தது பற்றி ஊழியர்களுக்கு உடனடியாக தெரியவில்லை. கீழ் தளத்தில் பிடித்த தீ, முதல் தளத்துக்கு பரவிய பிறகுதான் ஊழியர்கள் உஷாரானார்கள். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் 250 வீரர்கள் விரைந்தனர். போலீஸ் கமிஷனர் ஆர்.கே.பச்நந்தா தலைமையில் போலீஸ் படையும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு பணியை முடுக்கி விட்டனர். 

அதற்குள் கட்டிடத்தின் 3 தளங்களில் தீ பரவி விட்டது. 7 தளங்களிலும் கரும்புகை சூழ்ந்தது. முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்ட கட்டிடம் என்பதால் ஜன்னல், கதவு என எல்லா இடங்களிலும் வழிகள் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் மருத்துவமனையில் சிக்கிய நோயாளிகள் உடனடியாக வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு நோயாளியாக வெளியே கொண்டு வந்தனர். தீயில் 60க்கும் அதிகமான நோயாளிகள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து உறுதியான தகவல் இல்லை. மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நோயாளிகளுக்கு அந்த மருத்துவமனையிலேயே டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். பலர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டிடத்தின் 3வது தளம் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பிர்ஹத் ஹக்கீம், தீயணைப்பு துறை அமைச்சர் ஜாவத் கான் ஆகியோரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். கட்டிடத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் எளிதாக எல்லா தளங்களுக்கும் தீ பரவியதாக அமைச்சர் ஜாவத்கான் தெரிவித்தார். இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தீ முழுமையாக அணைக்கப்பட்டு அனைத்து தளங்களையும் தீயணைப்பு வீரர்கள் பரிசோதித்த பின்னரே இறப்பு குறித்த முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். நோயாளிகள் மட்டுமின்றி டாக்டர்கள், ஊழியர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். தீ பிடித்த கட்டிடத்தில் இருந்த நோயாளிகள் நிலை குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனையில் ஒருவரும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்து அவர்கள் மருத்துவமனையின் ரிசப்ஷன் பகுதியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

தலைநகரமாக அறிவித்து டெல்லிக்கு இன்று 100 வயது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தலைநகர் டெல்லிக்கு இன்று 100 வயது பூர்த்தியாகிறது. இதனையொட்டி டெல்லி நகர மக்களுக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மொகலாயர் காலத் தில் இந்தியாவின் தலைநகராக டெல்லி இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா வந்ததும் முதலில் கொல்கத்தாவை தலைநகராக வைத்து அவர்கள் ஆட்சி செய்தனர். கடந்த 1911ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி டெல்லியை இந்தியாவின் தலைநகராக ஆங்கிலேய அரசு அறிவித்தது. இந்தியாவின் தலைநகராக டெல்லி அங்கீகரிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று காலை மக்களவை கூடியதும், தலைநகர் டெல்லியின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் டெல்லி மக்களுக்கு சபாநாயகர் மீராகுமார் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியாவில் மிகப்பெரிய நகரமாக டெல்லி உருவாகியிருப்பதை நினைவு கூர்ந்தார். மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நகராக டெல்லி விளங்குகிறது. உலக அளவில் மிகவும் பசுமையான தலைநகரங்களில் ஒன்றாகவும், உலக தரம் வாய்ந்த கட்டமைப்புகளுடன், பழமையான நினைவுச்சின்னங்கள் நிறைந்த நகரமாகவும் டெல்லி விளங்குகிறது.

பீரங்கி ஓட்டிய முதல் இந்திய குடியரசு தலைவர்

பீரங்கி ஓட்டிய முதல் இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல்
ராஜஸ்தானில் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் 500 மீட்டர் பீரங்கியை 15 நிமிடங்கள் ஓட்டி பீரங்கி ஓட்டிய முதல் இந்திய குடியரசு தலைவர் என்ற பெருமை சேர்த்தார். இதற்கு முன் சுக்கோய்-30 ரக போர் விமானம், எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஆகியவற்றிலும் ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 7, 2011

புதிதாக 6623 ஆசிரியர் பணியிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


தமிழகத்தில் 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 710 ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட உயர்நிலைப் பள்ளிகளாக 2011-12ம் ஆண்டில் தரம் உயர்த்தவும், இந்த உயர்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 பட்டதாரி ஆசிரியர் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், தலா 1 ஆய்வக உதவியாளர் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடம், தலா 1 இளநிலை உதவியாளர் வீதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆண்டுக்கு ரூ.113 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 600 செலவு ஏற்படும். இவ்வாறு தரம்  உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்த செலவினங்களுக்காக தலா ரூ.58.12 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு ரூ.412 கோடியே 65 லட்சம் ஒப்புதல் அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இதேபோல் 2009ம் ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 19 லட்சம் கூடுதல் செலவாகும். அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் தொடக்க கல்வி துறையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பணிபுரிய 1581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலை பள்ளி, மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூ.75 கோடியே 40 லட்சம் செலவு ஏற்படும்.  இதேபோல் 6 முதல் 8ம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58 கோடியே 82 லட்சம் செலவாகும்.  மேலும் அனைவருக் கும் கல்வி திட்டத்தின் கீழ் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக  2011-12 கல்வியாண்டில் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பணியிடம் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 63 ஆயிரம் செலவு ஏற்படும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sunday, December 4, 2011

current affairs

 Dec-1         Dec-2        Dec -3       Dec -4       Dec-5

 Dec -6        Dec-7        Dec -8      Dec -9        Dec-10

 Dec-11        Dec-12     Dec -13     Dec -14    Dec-15

 Dec-16       Dec -17      Dec -18     Dec-19    Dec-20

 Dec-21       Dec -22      Dec -23     Dec-24    Dec -25

Dec-26       Dec-27        Dec-28      Dec-29     Dec -30

Dec-31

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிபுதிய மகப்பேறு திட்டம்



டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 6 ஆயிரம் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் இதுவரை வழங்கப்பட்டது.  
இந்த உதவித் தொகையை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி இந்த திட்டத்தை தலைமை செயலகத்தில் ஜெயலலிதா தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கினார்.  
இதைத் தொடர்ந்து இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ. 313 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1-6-2011-ல் இருந்து அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தும் வகையில் தாய்மார்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது.  
பிரசவித்த தாய்மார்கள், 7-வது மாதத்தில் உள்ள கர்ப்பிணிகள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு முடித்தவர்கள் என 3 பிரிவினரையும் தேர்வு செய்து நிதி வழங்குகிறார்கள். இதை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

திட்டங்கள்




உலகின் அதிவேக விமானத் திட்டம்

விமானங்களிலேயே மிகவும் வேகமாக பறக்கக்கூடிய ஜெட் விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் தான். அதைவிட வேகமாக மின்னல் வேகத்தில் பறக்கும் விமானத்தை வடிவமைக்கும் பணியில் அமெரிக்க அரசின் பாதுகாப்பு அமைப்பான பெண்டகன் ஈடுபட்டுள்ளது. விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளின் வேகத்தில் செல்லும்படியாக விமானத்தை வடிவமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த விமானம் வெளிப்புற காற்றை உள்ளிழுத்து இரண் டாயிரம் டிகரி பாரன்ஹ¦ட் அளவிற்கு வெப்பமடைந்து விமான எரிபொருளுடன் இணைந்து புயல் வேகத்தில் பறக்கும் எனத் தெரிகிறது. இதற்கான முதல் கட்ட ஆய்வு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால் உலகின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு ஒருமணி நேரத்தில் பறந்து செல்லலாம். நொடிப் பொழுதில் மற்றொரு நாட்டை தாக்கி அழிக்கலாம். இந்த மின்னல் வேக விமானத்திற்கு ஸ்கிரேம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ளது.

இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திட்டம்

இயற்கைப் பேரழிவுகள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பதற்கான பல்வேறு தொழில்துறை நிறு வனங்களுடன் ஐ.நா.வின் தொலைத்தொடர்பு அமைப்பு திட்டமிட்டிருக் கிறது. தொலை தூரத்தில் இருக் கும் பிரதேசங்கள், ஏழைநாடுகள் ஆகியவற்றில் இயற்கைச் சீற்றங் கள் குறித்து முன்அறிவிப்பு செய்வதற்கு போதுமான வசதிகள் இல்லை. இதை மேம்படுத்துவதற்காகவே இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், பேரழிவுகள் நடக்கும் இடங்களில் பாதிக்கப்பட்டோரை தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் நாம் காப்பாற்ற முடியும். நிவாரணப் பணிகளை விரைவாகச் செய்வதற்கும் இவை பயன்படும். சர்வதேச தொலைத் தொடர்பு அமைப்பு இதற்கான புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

தாதா சாகேப் பால்கே தேவ் ஆனந்த் திடீர் மரணம் !

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டன்: இந்தி சினிமாவில் காதல் மன்னன் என பெயர் பெற்ற நடிகர் தேவ் ஆனந்த், இன்று அதிகாலை மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.


இந்தி படங்களில் 1940களில் தொடங்கி 30 வருடம் கொடி கட்டி பறந்தவர் தேவ் ஆனந்த். சமீபத்தில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டு சென்றார். 


அங்குமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் அடைந்தார். அவரது மகன் சுனில் உடனிருந்தார். 

1946ம் ஆண்டு ‘ஹம் ஏக் ஹெயின்Õ படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். ‘ஜித்திÕ என்ற படம் 1947ம் ஆண்டு ரிலீஸானது. அது சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து முன்னணி நடிகரானார். ‘பேயிங் கெஸ்ட்Õ, ‘பாஸிÕ, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணாÕ, ‘தேஸ் பரதேஸ்Õ உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் நடித்த ‘கைட்Õ என்ற படம் வெளிநாட்டு படங்களுக்கான போட்டி பிரிவில்  ஆஸ்கர் போட்டிக்காக அனுப்பப்பட்டது. 2001ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2002ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றார். பட நிறுவனம் தொடங்கி 35க்கும் அதிகமான படங்களை தயாரித்தார். பல படங¢களை இயக்கியுள்ளார். 

1950களில் ஏராளமான காதல் கதை படங்களில் நடித்து புகழ்பெற்றதால் காதல் மன்னன் என புகழ்பெற்றார். படங்களில் இவரது வித்தியாசமான வசன உச்சரிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து வெள்ளி விழா படங்களை தந்ததால் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

விருதுகள்




கிரீன் ஆஸ்கார்ஸ் விருது

கழிவுப் பொருட்களைக் கொண்டு எரி பொருளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லண்டனில் ஆண்டுதோறும் கிரீன் ஆஸ்கார்ஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விருது கேரளாவைச் சேர்ந்த பையோடெக், கர்நாடகாவைச் சேர்ந்த செல்கேர் மற்றும் எஸ்.கே.ஜி.சங்கர் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த மூன்று இந்திய நிறுவனங்களுக்கும் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோர் கிரீன் ஆஸ்கார்ஸ் விருதுகளை வழங்கினார்.

ஆஸ்கார் விருதுகள்

திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப் படுவது ஆஸ்கார் விருதாகும். ஆஸ்கார் விருதின் 81-—வது விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கோடாக் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டன. இந்த படத்துக்கு சிறப்பாக இசையமைத்த இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் ஆகிய இரண்டு பிரிவுகளில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஒலி சேர்ப்புக்கான விருது கேரளத்தைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டிக்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விருது

மேகாலயத்தில் பெண்கள் மத்தியில் பணிபுரிந்து வரும் சமூக சேவகிகள் இருவருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் குழந்தைகள் கடத்தலைத் தடுப்பதற்கு முழுமையான ஒருமுறையை உருவாக்கியதற்காக ஹசீனா கர்பி என்பவருக்கும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும் சகோதரி ஜுடித் ஷதாப் என் பவருக்கும் யுனானிமா என்ற சர்வதேச அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் ஆசியர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம




உலக பணக்காரர்கள் பட்டியல்

உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முத லிடத்தில் முகேஷ் அம் பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபரு மான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது. மேலும் 1,950 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் ஏழாவது பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.

நாட்டில் தனியார் முதலீடு அதிகரிப்பு

நம் நாட்டில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எவேல்யூசெர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு மேற்கொள்ளப்படும் தனிநபர் பங்கு முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.80,000 கோடி என்ற அளவில் இருக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலை சூழல் பற்றிய சர்வதேச சர்வே

கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டாயிரம் இந்திய ஊழியர்கள் உள்பட மொத்தம் எழுபதாயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய ஊழியர்களில் 70% பேர் தாங்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள் ளார்கள். ஊழியர்களின் திருப்தியில் இந்தியா 7_வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா--துபை இடையே வர்த்தகம் உயர்வு

இந்தியா--துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002_ம் ஆண்டில் இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் இடையிலான வர்த்தகம், துபை மூலமே நடக்கிறது. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளிடையேயான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். துபைக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.

அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு

கடந்த ஜனவரி மாதத்தில் நம் நாட்டில் 273 கோடி டாலர் மதிப்பிற்கு அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரடி முதலீட்டை விட (176 கோடி டாலர்) 55 சதவீதம் அதிகமாகும். ஆனால் அதற்கு பிறகு அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு தீவிரமடைந்ததால், நம் நாட்டில் அன்னிய நேரடி முதலீடு குறைந்துபோனது. இந்த நிலையில் சென்ற ஜனவரி மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு அதிகளவில் வந்துள்ளது என்பது அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

சர்வதேசம்




ரஷ்யா ஏவுகணை சோதனை

தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக் கைத் தாக்கும் பழமையான ஆர்.எஸ்.-18 ரக ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. 105 டன் எடையும், 80 அடி உயரமும் கொண்ட இந்த ஏவுகணை சுமார் 9 ஆயிரத்து 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கவல்லது. இந்த ரக ஏவு கணைகள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவற்றைத் தொடர்ந்து ராணுவத்தில் பயன்படுத்தலாமா என்பதை முடிவு செய்வதற்காகவே ரஷ்யா இந்தச் சோதனையை நடத்தியது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை கம்சத்கா தீபகற்பத்தில் இருந்த இலக்கை சரியாகத் தாக்கியது. பழமையான ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற சோதனைகளை ரஷ்யா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் மாயமான தீவுகள்

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு களால் இதுவரை 30 தீவுகள் மறைந்து விட்டன. தீவுகளின் கூட்டம் என்றழைக்கப் படும் இந்தோனேசிய நாட்டில் மொத்தம் 17,504 தீவுகள் இருந்தன. அந்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் இயற்கை சீற்றங்களினால் தற்போது 17,480 தீவுகள் மட்டுமே உள்ளன. இவையனைத்தும் சுனாமி, நிலநடுக்கம், கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களினால் அழிந்தன. மேலும் தீவுகள் அழிவதைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 2030-—க்குள் 3000 தீவுகள் மறையும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிரகத்தின் சந்திரனுக்கும் வளையங்கள்

சனிக்கிரகத்தைச் சுற்றிலும் வளையங்கள் இருக்கின்றன. அதே போல சந்திரன்களில் ஒன்றான ரியாவுக்கும் அதைச் சுற்றிலும் வளையங்கள் உள்ளன. இதை நாசாவின் காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. ரியா சனிக்கிரகத்தின் 2-—வது பெரிய சந்திரன் ஆகும். இதன் விட்டம் 1500 கிலோமீட்டர். நீண்ட காலத்துக்கு முன்பு வால் நட்சத் திரங்கள் மோதிக் கொண்டதால் அதிலிருந்து வெளியான வாயுவும், திடப் பொருள்களும் சேர்ந்து தான் இப்படி வளையங்களாக உருவாகியுள்ளன என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் அமைச்சர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகை யாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை வெளி யேற்றுவதை ஒவ்வொரு நாடும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மேலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது பனியாறுகள் சுருங்கி, குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் எனவும் சீனாவில் வெப்பம் மற்றும் வறட்சி அதிகரிக்கும் எனவும், கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளை சூறைக்காற்றுகள் அடிக்கடித் தாக்கும் என வும் மாநாட்டில் அறிக்கை வெளியிடப் பட்டது. இந்த அறிக்கையை ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.

உலகின் மிகச் சிறந்த நகரம்

உலகின் மிகச் சிறந்த நகரமாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் சிறந்த நகரங்களை கண்டறிய மோனோகிள் என்ற பத்திரிகை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் தரமான வாழ்க்கை முறை, மிகப்பெரிய அளவிலான போக்குவரத்து முறை, உணவகங்கள், சுற்றுச் சூழல், நவீன டிசைன் சென்டர்கள் உள்பட பல அம்சங்களில் டென்மார்க் நாட்டின் தலை நகர் கோபன்ஹேகன் உலகிலேயே சிறந்த நகரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய நகரங்களாக கருதப்படும் லண்டன் மற்றும் நியூயார்க், சிறந்த முதல் 20 நகரங்கள் பட்டியலில் கூட இடம் பெறவில்லை .

தேசம





மலேசிய நாட்டில் இந்திய பல்கலைக்கழகம்

இந்திய பல்கலைக்கழகங்களின் கூட் டமைப்பு மலேசியாவில் ஒரு சர்வதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைக்க வுள்ளது. மலேசியாவில் உள்ள மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான பெராக் பகுதியில் இப்பல்கலைக்கழகம் கட்டப்படுகிறது. ஐந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து ஒருங் கிணைந்த பல்கலைக்கழகத்தை இங்கு உரு வாக்குகின்றன. சென்னை பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஹைதராபாத், சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக் கழகம், பெல்காமில் உள்ள கோல்டு பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இந்த பல் கலையை உருவாக்குகின்றன. சுமார் ரூ.540 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இந்தப் பல்கலையின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும். மேலும் இதன் மூலம் இரு நாடுகளும் கூட்டாக கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடு படவும் தவிர மருத்துத் துறையில் இருநாட்டு மாணவர்களும் பயனடையும் வகையில் பயிற்சிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- _ பிலிப்பைன்ஸ் இடையே உடன்பாடு

இந்தியா-பிலிப்பைன்ஸ் இடையே பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதற்காக கூட்டு ஆணையம் ஒன்றை அமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. ஆண்டுக்கு இருமுறை கூடும் இந்த ஆணையம், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தும். இதில் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள். மேலும் இருநாடுகளுக்கும் இடையே ஏற்றமதி, இறக்குமதியாகும பொருள்களின் பட்டியலை இறுதி செய்யும் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று இந்திய வர்த்தக கழகம் மற்றும் பிலிப்பைன்ஸ் சர்வதேச வர்த்தக கழகம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது. ஆய்வு, வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் மாற்று எரிசக்தி ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்தவும் இருதரப்பும் சம்மதித்தன. இது தவிர, சுகாதாரம் மற்றும் மருந்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே ஒப்பந்தம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே வேளாண் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. வேளாண் துறையில் இந்த இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி வேளாண் விரிவாக்கம், நிலம், நீர் ஆகியவற்றில் மேலாண்மை மற்றும் பாது காப்பு, வேளாண் பொருள் வர்த்தகத்தை ஊக்குவித்தல், வேளாண் துறையில் முதலீடு, கால்நடைகள் பராமரிப்பு, மீன் வளம் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

தமிழகம்



தமிழகம்

தண்ணீரால் ஓடும் கார் கண்டுபிடிப்பு

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக வேறு தொழில்நுட்பத்தில் இயங்கும் காரை கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) வேதியியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் பி.விஸ்வநாதனின் திட்ட வடிவில், தண்ணீரால் ஓடும் காரை ஆர்.எம்.என். தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஓராண்டு தீவிர முயற்சிக்குப் பின் இந்தக் கண்டுபிடிப்பு சாத்தியமாகி உள்ளது. வெறும் தண்ணீரை மட்டும் கொண்டு காரை இயக்க முடியாது. தண்ணீருடன் சில வேதிப்பொருள்களை சேர்ப்பதின் மூலம் ஹைட்ரஜன் கிடைக்கிறது. இந்த ஹைட்ரஜன் மூலம் காரை இயக்குவது சாத்தியமாகி உள்ளது. இது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காது.

இந்தியாவுக்கு அதிநவீன ராணுவ தாளவடங்கள்

இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது இஸ்ரேல். அண்மைக்காலமாக இருநாடுகளுக் கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. அத்தோடு இஸ்ரேல் தளவாடங்களை யும், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிடு வதில் இஸ்ரேலின் அனுபவத்தையும் பெற இந்தியா விரும்புகிறது. மேலும் புதிதாக ஏற்பட் டுள்ள உடன்பாட்டின்படி கடலோரப் பாது காப்பை வலுப்படுத்தவும் எதிரிகளின் விமானங் களை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுத்து அழிக்கும் ரேடார்களை இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. மும்பைத் தாக்குதலை அடுத்து கடல் வழி மற்றும் வான்வழித் தாக்குதலைத் தடுக்க ரேடார் அமைப்புகளை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கு இஸ்ரே லின் ‘ஏரோஸ்டாட்’ ரேடார்களை இந்தியா வாங்க உள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஷெட்

சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2009-—10---ம் நிதி யாண்டில் ரூ.1,614 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் புதிய வரிகள் இல்லை. பற்றாக்குறை ரூ.1.14 கோடியாகும். இந்த நிதியாண்டில் மொத்த வரவு ரூ.1613.24 கோடி, மொத்த செலவு ரூ.1614.38 கோடி, பற்றாக்குறை ரூ.1.14 கோடி ஆகும்.

மூன்று புதிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரோ விஞ்ஞானிகள் பூமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்று புதிய வகை பாக்டீரியாக்களை பூமியின் மேல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோ கடந்த 2005--ல் 459 எடை கொண்ட பலூன் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக பூமிக்கு மேல் 20 முதல் 41 கிமீ., வரையிலான தூரத்தில் நிறுத்தியது. பின்னர் அந்த பலூன் பாராசூட் மூலம் பூமிக்கு வந்தது. அதில் ஒட்டியிருந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய செல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மாலிகுலர் அறிவியல் மையத்தில் வைத்து ஆராயப்பட்டது. இந்த ஆராய்ச்சின் முடிவில் இதுவரை பூமியில் அறியப்படாத மூன்று பாக்டீரியாக்கள் விண் வெளியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. பூமிக்கு மேல் 40 கிமீ., தூரத்தில் புற ஊதா கதிர்களிலில் இருந்து தப்பி உயிர் வாழ்வது என்பது எந்த உயிரினத்துக்கும் இய லாத காரியம் என்பதால் இந்த பாக்டீரியக்கள் விண்வெளியின் வேறு பகுதியிலிருந்து வந்திருக் கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மூன்று பாக்டீரியாக்களில் ஒன்றுக்கு பாசில்லஸ் இஸ்ரோனேன்சிஸ் என இஸ்ரோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மற்றொன்றுக்கு பாசில்லஸ் ஆர்யபட்டா என இந்திய வானசாஸ்திர முன்னோடி ஆர்யபட்டாவின் பெயர் கொடுக்கப்பட்டுள் ளது. மூன்றாவது பாக்டீரியாவுக்கு ஜேனிபாக் டர் ஹோய்லை என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாக்டீரியாக்கள் முன்பு பூமியில் உள்ள எரிமலை பகுதிகளில் வசித்திருக் கலாம். அவை எரிமலை வெடிப்பின்போது துகள் களுடன் சேர்ந்து விண்ணில் பறந்திருக்கலாம். பின்னர் அது அங்குள்ள சூழலுக்கு வாழ பழகி கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Saturday, December 3, 2011

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் அக்னி ஏவுகணை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பாலாசூர் : அணுகுண்டுகளை தாங்கி சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அக்னி 1 ஏவுகணை இன்று ஒடிஷா கடற்கரையில் மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் அக்னி வரிசை ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி சோதனை செய்து வருகிறது. அக்னிகள் ஏவுகணை பல முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அதன் தயார் நிலை குறித்து அவ்வப்போது ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் டிஆர்டிஒ விஞ்ஞானிகள் முன்னிலையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் அணுகுண்டுகளை தாங்கி செல்லும் சக்தி படைத்த அக்னி 1 ஏவுகணை இன்று ஒடிஷா கடற்பகுதியில் உள்ள வீலர் தீவில் உள்ள ஏவுகணை பரிசோதனை மையத்தில் மீண்டும் சோதித்து  பார்க்கப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி மரணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி :  அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி (70) இன்று காலையில் மரணமடைந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அவரது உடல் நிலை மோசமானது. இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இந்திரா கோஸ்வாமி, கடந்த 2000ம் ஆண்டு இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருது பெற்றவர். அவர் எழுதிய புத்தகங்கள், நாவல்கள் பல்வேறு விருதுகளை வென்றுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக அசாமை உலுக்கி வரும் உல்பா தீவிரவாத பிரச்னையை தீர்க்க அமைதி பேச்சுவார்த்தைக்கு இவர் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது.

Saturday, November 26, 2011

எகிப்தின் புதிய பிரதமர்


கமால் அல்-கன்சூரி

First Published : 26 Nov 2011 03:59:29 AM IST

 எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் ராணுவ ஆட்சியாளர்களைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான 
கெய்ரோ, நவ.25: எகிப்து பிரதமராக கமால் அல்-கன்சூரி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
 எகிப்து நாட்டை ஆண்டு வரும் ராணுவக் கவுன்சில் அவரை நியமித்துள்ளதாகவும், இடைக்கால அரசின் பிரதமர் யெசாம் ஷரஃப் அமைச்சரவையின் ராஜிநாமாவை கவுன்சில் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கன்சூரி 1996-ம் ஆண்டு முதல் 1999 வரை பிரதமராகப் பதவியிலிருந்தவர். ஹோஸ்னி முபாரக்கின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த கன்சூரி, அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டபோது, முபாரக்கிடமிருந்து விலகினார். தனது பதவிகாலத்தின்போது சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளுடனான எகிப்தின் உறவை கன்சூரி மேம்படுத்தினார்.
 வன்முறைக்கு 41 பேர் சாவு: எகிப்தில் ராணுவக் கவுன்சிலுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை முதல் போராட்டம் நடந்து வருகிறது. பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறைகளில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் மட்டும் 36 பேர் உயிரிழந்தனர்.
 உடனடியாக நிரந்தர அரசை ஏற்படுத்தக் கோரியும், ராணுவக் கவுன்சிலின் அதிகாரங்களை குடிமக்கள் அரசிடம் ஒப்படைக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Friday, November 25, 2011

தனியார் பள்ளிகளில் 25 % இட ஒதுகிடு



HÛZ UÖQYŸL¸Á L¥«oÙNXÛY AWr H¼h•
AWNÖÛQ ÙY¸œ|

ÙNÁÛ], SY.24-

6 ˜R¥ 14 YV‰ E·[ AÛ]†‰ hZ‹ÛRLºeh• CXYN, LyPÖV L¥« YZjh• YÛL›¥ U†‡V AWr L¥«oNyP• ÙLց| Y‹‰·[‰. A‹R NyP†ÛR AU¥T|†‰• YÛL›¥ R–ZL AWr LP‹R YÖW• «‡˜Û\LÛ[ A½«†R‰. RÂVÖŸ T·¸L¸¥ HÛZ UÖQYŸLºeh 25 NR®R CPJ‰eg| YZjLT|• GÁ¿• AR¼LÖ] L¥«o ÙNXÛY AWÚN H¼¿e ÙLÖ·º• GÁ¿ A½«eLTy| C£‹R‰.

ARÁTz, RÂVÖŸ rVŒ‡ T·¸L¸¥ Tzeh• HÛZ UÖQYŸL· (h|•T ஆண்டு  Y£UÖ]• ¤.2 XyN†‡¼h·), S¦‹R ‘¡«]Ÿ (RÖ²†RTyÚPÖŸ, TZjhz›]Ÿ), ÛL«PTyÚPÖŸ (A]ÖÛRL·, GšyÍ ÚSÖVÖ¥ TÖ‡eLTyÚPÖŸ, AWYÖ‚L·, ‰“W° ÙRÖ³XÖ[ŸL¸Á hZ‹ÛRL·) BfÚVÖ¡Á Tz“ ÙNXÛY AWr H¼¿eÙLÖ·º•. C‹R ŒÛX›¥, CR¼LÖ] AWNÖÛQ ‘\‘eLTy| E·[‰.

25 NR®R J‰egyzÁg² RÂVÖŸ T·¸L¸¥ ÚNŸeLT|• UÖQY-UÖQ«Lºeh q£ÛP, “†RLjL·, N†‰Q° BfVÛY AWr U¼¿• ER« ÙT¿• T·¸L¸¥ Tzeh• UÖQYŸLÛ[ ÚTÖ¥ CXYNUÖL YZjLT|•. C‰ÙRÖPŸTÖL RÂVÖŸ T·¸ ŒŸYÖL†‡]£PÁ AWr A‡LÖ¡L· BÚXÖNÛ] SP†‡ Y£f\ÖŸL·.

இந்தியாசில்லறை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு

புது தில்லி, நவ. 24: சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
 மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இதில், மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு திரிணமூல் காங்கிரûஸ சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி எதிர்ப்பு தெரிவித்தார்.
 கூட்டணி கட்சியின் எதிர்ப்பையும் மீறி சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
 இதன் காரணமாக ரூ.29.50 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய சில்லறை விற்பனைச் சந்தையில் வால்மார்ட், ஓமன்மெகா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் விரைவில் கடை விரிக்கும். பத்து லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் சுமார் 53 நகரங்களில் அந் நிறுவனங்களின் பல்பொருள் அங்காடி அமைக்கப்படும் என்றும் தெரிகிறது.
 இடவசதியை கருத்திற்கொண்டு நகரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவு வரை அங்காடியை அமைத்துக் கொள்ள எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 மேலும் ஒரு பொருள் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 பா.ஜ.க., இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வியாபாரிகள் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 2,500 மாதிரி பள்ளிகள்: அமைச்சரவைக் கூட்டத்தில், தனியார்- அரசு பங்களிப்பில் 2,500 மாதிரி பள்ளிகளை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும்.
 தனியார் நிறுவனங்கள் நிலங்களை வாங்கி பள்ளிக்கான கட்டடங்களை கட்ட வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு மாதிரி பள்ளியிலும் 2,000 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதில் மத்திய அரசு சார்பில் 980 மாணவர்களும், மீதமுள்ள இடங்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சார்பிலும் நிரப்பப்படும்.

சென்னை ஐகோர்ட்டுக்கு வயது 150 !

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை : இந்தியாவின் முதல் சுப்ரீம் கோர்ட் சென்னையில்தான் முதன்முதலில் அமைக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தற்போதுள்ள சென்னை ஐகோர்ட்தான் சுப்ரீம் கோர்ட்டாக செயல்பட்டு வந்தது. அதற்கு வானளாவிய அதிகாரமும் இருந்தது.  சென்னை ஐகோர்ட் உருவானதில் பல சுவையான தகவல்கள் உள்ளன. சென்னையில் கி.பி. 1600 முதல் 1800 வரை பல்வேறு பெயர்களில் கோர்ட்கள் செயல்பட்டு வந்தன. இங்கிலாந்து அரசர் 1-ம் ஜேம்ஸ், புதிய கோர்ட் அமைப்பதற்கான உத்தரவை 1609 மே 31-ம் தேதி அறிவித்தார்.  ‘ராயல் சார்ட்டர்’ என்ற பெயரில் செயல்பட்ட இந்த கோர்ட், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியினரால் நடத்தப்பட்டது. குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு இருந்தது. பின்னர் கடற்கரை பகுதியில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கிழக்கிந்திய கம்பெனியினர் உருவாக்கினர். அப்போது, ‘சத்திரம்’ என்ற பெயரில்தான் கோர்ட் இயங்கியது. இதில் சிறிய குற்றங்களுக்கான வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்தன. 
சென்னை மாகாண கவர்னர் சத்திரம் அல்லது டவுன் ஹாலில்தான் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. வழக்குகளை விசாரிப்பவர் ‘கண்ணப்பர்’ என்று அழைக்கப்பட்டார். பிரச்னைக்குரிய, குழப்பமான வழக்குகளை, குறிப்பாக ஆங்கில மொழியில் உள்ள வழக்குகளை கண்ணப்பர் விசாரிக்க மாட்டார். அந்த வழக்குகள் இங்கிலாந்தில் உள்ள கோர்ட்களுக்கு மாற்றப்பட்டன.
1802-ல் ஜில்லா கோர்ட்கள் (மாவட்ட கோர்ட்) அமைக்கப்பட்டன. இதில் மாவட்ட அளவிலான சிவில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. ஜில்லா கோர்ட்களின் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக 1842-ல் புரவின்ஷியல் (மாநில அளவிலான) கோர்ட்கள் அமைக்கப்பட்டன. 1843-ல் தலைமை குற்றவியல் கோர்ட் உருவாக்கப்பட்டது. 1861-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி, வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம், அந்நாட்டு அரசரின் நேரடி ஏஜென்டான கவர்னருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, எல்லா வழக்குகளும் சென்னையிலேயே விசாரிக்கப்பட்டன.

அதே 1861-ல் இந்தியாவில் ஐகோர்ட்களை அமைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி கொல்கல்தா, சென்னை, மும்பை ஆகிய 3 இடங்களில் ஐகோர்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் செயல்பட்டு வந்த சுப்ரீம் கோர்ட்டை ரத்து செய்யும் உத்தரவை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. சென்னை ஐகோர்ட்டை உருவாக்குவதற்கான அறிவிப்பாணையை 1862 ஜூன் 26-ல் விக்டோரியா மகாராணி பிறப்பித்தார். இரண்டு மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை ஐகோர்ட் அமைப்பதற்கான உத்தரவு செயல்படுத்தப்பட்டது. இடவசதி இல்லாததால் பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள கஸ்டம்ஸ் ஹவுஸ் கட்டிடத்தில்தான் சுப்ரீம் கோர்ட் இயங்கிவந்தது. ஐகோர்ட் அறிவிப்புக்கு பின்னர் சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு கோர்ட் மாற்றப்பட்டது. 1892 வரை கலெக்டர் அலுவலக கட்டிடத்திலேயே ஐகோர்ட் இயங்கி வந்தது. இதற்கிடையே, 1888-ல் தற்போதுள்ள ஐகோர்ட் வளாகத்தில் ஐகோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 4 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த பணி முடிவடைந்த நிலையில், 1892 ஜூலை 12-ம் தேதி புதிய கட்டிடத்துக்கு ஐகோர்ட் மாற்றப்பட்டது.

ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதியாக ராஜமன்னார் பொறுப்பேற்றார். பல வரலாற்று சிறப்பு மிக்க வழக்குகளை சென்னை ஐகோர்ட் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, அண்ணாவின் ஒரே நாடு பத்திரிகை வழக்கு, விஷ ஊசி வழக்கு போன்ற முக்கிய வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டன. வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட் தொடங்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் 149 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. 150 ஆண்டில் ஐகோர்ட் தனது பணியை தொடங்கியுள்ளது. இதையடுத்து, 150-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் விழா நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐகோர்ட்டும் வக்கீல்கள் சங்கங்களும் செய்து வருகின்றன. விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சதாசிவம், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், தமிழக அமைச்சர் பரஞ்சோதி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்கின்றனர்.   

விழா குறித்து வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்களுக்கும் முன்னோடியாக சென்னை ஐகோர்ட் செயல்பட்டு வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. நாட்டின் முதல் சுப்ரீம் கோர்ட் என்ற பெருமையை பெற்றுள்ள ஐகோர்ட்டின் 150-வது கொண்டாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்’’ என்றார். பெண் வக்கீல்கள் சங்க தலைவர் பிரசன்னா கூறும்போது, ‘‘பாரம்பரியம்மிக்க ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு விழாவை தமிழக வக்கீல்கள் கொண்டாடி வருகிறோம். இதையொட்டி ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பெண் வக்கீல்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை ஐகோர்ட் தமிழகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சிறப்பு சேர்த்துள்ளது’’ என்றார்

Friday, November 18, 2011

5 நோய்க்கு ஒரே தடுப்பூசி அடுத்த மாதம் தொடக்கம்!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தமிழகம், கேரளாவில் 5 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் பி.கே.பிரதான் கூறியதாவது: ஜெனீவாவை சேர்ந்த தடுப்பூசிகளுக்கான உலக கூட்டமைப்பு (காவி), 5 நோய்களை தடுக்கும் ஒரே தடுப்பூசியை இந்தியாவுக்கு இலவசமாக வழங்குகிறது. ரூ.765 கோடி மதிப்புள்ள தடுப்பூசியை 3 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. இவை 10 மாநிலங்களில் பயன்படுத்தப்படும். அடுத்த மாதம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக தடுப்பூசி போடுதலில் சிறப்பாக செயல்படும் தமிழகம் மற்றும் கேரளாவில் திட்டம் தொடங்கப்படுகிறது. 

இரு மாநிலங்களிலும் முதல் ஆண்டில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 10 டோசாக அளிக்கப்படும். முதல் ஆண்டில் 50 லட்சம் டோஸ் தேவை. குஜராத், கர்நாடகா, அரியானா, கோவா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த மாநிலங்களில் தடுப்பூசியை கையாளும் திறனை ஆய்வு செய்த பின்னர், அவர்கள் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். 
இவ்வாறு பிரதான் கூறினார்.

ஐந்து நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை அறிமுகப்படுத்த, கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப பரிந்துரை குழு சிபாரிசு செய்தது. டிப்தீரியா, பெர்டூசிஸ், டெட்டனஸ், மஞ்சள் காமாலை, மூளை காய்ச்சல் ஆகிய நோய் தடுப்பாற்றலை இந்த தடுப்பூசி அளிக்கும்.

ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மாஸ்கோ: ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ஆதரவளிப்போம் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ரஷ்யா வந்துள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ - கிருஷ்ணா இருவரும் சந்தித்து, பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு, ஈரான் அணுஉலை பிரச்னைகள், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் செர்ஜி கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் தற்போது இந்தியா பார்வையாளர் அந்தஸ்தில் மட்டுமே உள்ளது. இந்த கூட்டமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யா ஆதரவளிக்கும் என்றார். ஷாங்காய் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

இந்தியா, பாகிஸ்தான், மங்கோலியா, ஈரான் ஆகிய நாடுகள் பார்வையாளர் என்ற அந்தஸ்தில் உள்ளன. இந்நிலையில் ஷாங்காய் கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவும் பாகிஸ்தானும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணா கூறுகையில், ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை உருவாக்க இந்தியாவும் ரஷ்யாவும் தேவையான உதவிகளை செய்யும் என்றார்.

பிரபலமானவர்கள்




உசைன் போல்ட்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ரீபாக் கிராண்ட் ப்ரீ தடகளப் போட்டியில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தூர ஒட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை 9.72 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2007_ல் இத்தாலியின் ரீட்டி நகரில் நடந்த தடகள போட்டியில் ஜமைக்கா வீரர் அசபா பாவெல் 9.74 வினாடி களில் 100 மீட்டர் தூரத்தை கடந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

சில்வியோ பெர்லுஸ்கோனி

இத்தாலி நாட்டின் மிகப் பெரிய தொழில் அதிபராக விளங்கி வருபவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் ஏற்கனவே இரண்டு முறை அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தவர். தற்போது நடந்த பார்லிமெண்ட் தேர்தலிலும், அவரது கட்சியே வெற்றி பெற் றது. இதையடுத்து மூன்றாவது முறையாக இத்தாலி நாட்டின் பிரதமராக சில்வியோ பெர் லுஸ்கோனி பதவியேற்றார்.

பி.வி. நாயக்

இந்திய விமானப் படையின் புதிய தலைவராக ஏர் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் தற்போது இந்திய விமானப் படையின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். விமானப் படையின் தற்போதைய தலைவர் ஃபாலி ஹோமி மேஜர், வரும் மே மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதைத் தொடர்ந்து பி.வி.நாயக் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். 

பாலூட்டும் பெண்களுக்கு, ரூ.1000 வழங்கும் திட்டம் நாடு முழுதும் விரிவாக்கம்!

 பாலூட்டும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் விரிவுப்படுத்தி உள்ளது. இது பற்றி மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில் மாற்றங்கள் செய்வதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் உயர்குழு அமைக்கப்பட்டு இருந்தது. கிராமப்புற மக்கள் 75% பேருக்கும், நகர்ப்புற மக்கள் 50 சதவீதம் பேருக்கும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க இந்த குழு கடந்த ஜூலையில் ஒப்புதல் வழங்கியது. 

இந்த நிலையில், இந்த நகல் மசோதாவில் மாற்றங்கள் செய்வது பற்றி மாநில அரசுகள் மற்றும் பல்வே று அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், மானிய விலையில் மக்களுக்கு உணவு தானியங்களை 3 கிலோவுக்கு அதிகமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த சலுகையை பாலூட்டும் தாய்மார்கள், ஆதரவற்றவர்கள், 
முதியோர்களுக்கு கிடைக்கவும்,

குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது 52 மாவட்டங்களில் மட்டும் அமலில் உள்ளது. இது நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது.  இவ்வாறு கே.வி.தாமஸ் கூறினார்.

இந்தியா - ஆசியன் மாநாடு

 : இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 4 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று புறப்பட்டு சென்றார். இந்தியா & ஆசியன் மாநாடு மற்றும் கிழக்கு ஆசியா உச்சி மாநாடு இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இந்தோனேசியா புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது, 

கிழக்கு ஆசிய நாடுகளிடையே உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து புறப்படும் முன்பாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட றிக்கையில், ‘ஆசியா நாடுகள் உடனான இந்தியாவின் வர்த்தக, தொழில் உறவுகள் மேலும் பலப்பட இந்திய & ஆசியன் உச்சி மாநாடு உதவும்’ என்று தெரிவித்துள்ளார். 
இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவு பற்றி மன்மோகன் பேச்சு நடத்துகிறார்.

 மாநாட்டை முடித்து கொண்டு இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு மன்மோகன் சிங் செல்கிறார். அங்கு அந்நாட்டு பிரதமர் லீ சின் லூங்கை சந்தித்து பேசுகிறார். பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, கலசார ரீதியான உறவுகளை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கின்றனர். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு 21ம் தேதி மன்மோகன் நாடு திரும்புகிறார்.

Tuesday, November 15, 2011

இத்தாலி பிரதமர் ராஜினாமா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ரோம்: இத்தாலியில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். பிரதமர் சில்வியோ ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அரசுக்கு கடன் அதிகரித்துள்ளதால் நிலைமை மோசமானது. இதையடுத்து பொருளாதார சீர்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வந்தது. பிரதமர் சில்வியோ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் மக்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சில்வியோ அறிவித்தார். அதிபர் ஜியார்ஜியோ நேபோலி டானோவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு காரில் சில்வியோ வெளியேறினார். அப்போது அதிபர் மாளிகைக்கு வெளியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாட்டு பாடியும் நடனமாடியும் உற்சாகமாக இருந்தனர். சில்வியோ காரில் வெளியில் வந்ததும் அவருக்கு எதிராக Ôபபூன் பபூன்Õ என்று கோஷம் போட்டனர்.
 அவருக்கு பதில் புதிய அரசுக்கு முன்னாள் ஐரோப்பிய கமிஷனர் மரியோ மோன்டி பிரதமராக இன்று தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

ஆசிய - பசிபிக் மாநாடு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஆசிய - பசிபிக் மாநாடு : ஒபாமா தொடங்கினார்!


ஹொனோலு: ஆசிய - பசிபிக் நாடுகளின் மாநாட்டை ஹவாய் தீவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று தொடங்கி வைத்தார். இதில் 21 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த 1993ம் ஆண்டு ஆசிய - பசிபிக் நாடுகள் மாநாட்டை அமெரிக்கா நடத்தியது. அதன்பின் இப்போதுதான் இந்த மாநாட்டை ஹவாய் தீவில் நடத்துகிறது. மாநாட்டை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொடங்கி வைத்தார். இதில் ஆசிய - பசிபிக் பகுதிகளை சேர்ந்த 21 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து ஒபாமா பேசுகையில், ÔÔஆசிய-பசிபிக் பகுதிகளில் வாழும் மக்கள், பொருளாதார வளர்ச்சிக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இந்த மாநாடு மூலம் நமக்கு கிடைத்துள்ளது. வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாடு குறித்து இந்த மாநாட்டின் முடிவில் பயனுள்ள முடிவுகளை எடுக்க வேண்டும்ÕÕ என்று கூறினார்.

3,000 கிமீ பாய்ந்து தாக்கும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பாலாசூர்: அணு ஆயுதங்களை தாங்கி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி 2 ஏவுகணைகளின் துல்லிய தன்மை மற்றும் தாக்கும் தூரத்தை மேம்படுத்தி அக்னி 2 பிரைம் ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. அக்னி 2 ஏவுகணை, 2,000 கிமீ தூரம் சென்று இலக்கை தாக்கும். அக்னி-3, 3500 கிமீ சென்று தாக்கும். இரண்டுக்கும் இடைப்பட்டு 3000 கிமீ தூரம் தாக்கி அழிக்கும் வகையில் அக்னி 2 பிரைம் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 
இது 20 மீட்டர் நீளம், 17 டன் எடை கொண்டது. ஒடிஷா மாநிலம் வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில், இன்று காலை 9 மணிக்கு அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கியதாக ராணுவ அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அக்னி 2 பிரைம் சோதனை தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேசம்




               
1/2011              2/2011            3/2011        4/2011          5/2011

6/2011            7/2011            8/2011        9/2011          10/2011

11/2011        12/2011

தேசம்



                 
1/2011              2/2011            3/2011        4/2011          5/2011

6/2011            7/2011            8/2011        9/2011          10/2011

11/2011        12/2011

தமிழ்நாடு


                   
1/2011              2/2011            3/2011        4/2011          5/2011

6/2011            7/2011            8/2011        9/2011          10/2011

11/2011        12/2011


சர்வதேசம்




நேபாளத்தில் பறவை காய்ச்சல்

ஐ5ச1 ரக பறவை காய்ச்சல் கிருமி நேபாளத்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. நேபாள அரசு, கிழக்கு பகுதியிலுள்ள ஜாபா மாவட்டத்தை, பறவை காய்ச்சல் பாதித்த அவசர நிலைமை பிரதேசமாக அறிவித்தது. இதுவரை, பறவை காய்ச்சல் தொற்று கொண்ட மக்கள் கண்டறியப் படவில்லை. ஆனால் இப்பிரதேசத்திலுள்ள மக்களின் உடல் நிலைமையை கண்காணிக்கும். இப்பறவை காய்ச்சல் கிருமிகளை நீக்க, சில காலம் பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்தது.

இஸ்ரேல் - ஹாமாஸ் போர்நிறுத்தம் 

இஸ்ரேல் காசா பகுதியில் குண்டுகளை வீசியதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு ஏராளமானவர்கள் படுகாயமடைந் தனர். உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்து போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தி வந்தன. அதைனை ஏற்று போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை முற்றிலும் நிறுத்தியதையடுத்து தாங்களும் போர்நிறுத்தம் செய்வதாக ஹமாஸ் இயக்கமும் அறிவித்தது.

இலங்கை அரசுக்கு ஐ.நா.சபை கண்டிப்பு

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அப் பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டித்துள்ளது. இது குறித்து ஐ.நா. அகதிகள் அமைப்புக்கான ஆணையர் ரோன் ரெட்மாண்ட் கூறியதாவது: “”இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ஏராளமான பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்தோ, அல்லது காணாமல் போயுள்ளனர். இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். போரில் ஏதுமறியாதவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும். போர் காரணமாக வெளியேறிய சுமார் இரண்டு லட்சம் மக்கள், மீண்டும் திரிகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் குடியேறத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய வசதிகள், போதிய பாதுகாப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அகதிகளில் 1,500 பேர், 2008 ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.இத்தகைய சாதகமான போக்கு இவ்வாண்டும் தொடர வேண்டும்’’ என்று ஐ.நா. ஆணையர் ரோன் ரெட்மாண்ட் தெரிவித் துள்ளார்.

வங்கதேசத்தில் புதிய அரசு 

வங்கதேச நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், ú‘க் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து ú‘க் ஹசீனா தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது. தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த கோலாகலமான விழாவில், வங்கதேச பிரதமராக ú‘க் ஹசீனா பதவி ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 31 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.

அமெரிக்கா-இந்தியா இடையே ஒப்பந்தம்

கடலோரக் காவலை வலுப்படுத்த 8 விமானங் களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கடல் மார்க்கமாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பது தெரியவந்ததால் கடலோரக் காவலை மேலும் வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு கடற்படைக்கு உதவியாக 8 விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. பி-81 ரக விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்குவதென முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க நிறுவனத் துடன் மிகப்பெரிய தொகைக்கு விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். புதிதாக வாங்கப்படும் விமா னங்களில் கப்பலைத் துளைக்கும் டார்பிடோ குண்டுகள், கப்பல் ஏவுகணைகளை முறியடிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களும் இருக்கும். இது தவிர நீர்மூழ்கியை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகம்




இணையத் தளம் மூலம் மின் கட்டணம்

சென்னையில் இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி வங்கிகள் உதவியுடன் அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. அதன்படி, ஆன்- லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி உதவியுடன் சென்னையில் எந்த நேரமும் பணம் கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. மேலும் இந்த சேவையில் ஐசிஐசிஐ, இந்தியன் வங்கிகளும் பங்கு கொண்டுள்ளது. தற்போது கும்மிடிப் பூண்டி முதல் மரக்காணம் வரை பயனடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் 

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி 

சென்னை அருகே உள்ள நெமிலியில் அமைக்கப்பட வுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது ரூ.908 கோடி மதிப்பிலானதாகும். அதோடு, இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.871.24 கோடி நிதியளிக்கவுள்ளது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கத் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம், கூடுதலாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.இந்த திட்டம் இன்னும் இரு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்திரயான் திட்ட இயக்குநருக்கு டாக்டர் பட்டம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 151-வது பட்டமளிப்பு விழாவில் சந்திரயான் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

திருமங்கலம் இடைத்தேர்தல்

திருமங்கலம் தொகுதி மதிமுக எம்எல்ஏ வீர. இளவரசன் மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம் உள்பட 26 போர் போட்டியிட்டனர். தமிழக தேர்தல் வரலாற்றில் சாதனையாக 88.78 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் லதா அதியமான் 39,266 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை வெற்றிக் கண்டார். மேலும் இத்தொகுதியில் 1991-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் சாமிநாதனை 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே இத்தொகுதியில் சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-மலேசியா இடையே ஒப்பந்தம்

இந்தியாவும், மலேசியாவும் தொழிலாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் சட்ட ரீதியாக தங்கியிருக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் வெளி நாடு வாழ் இந்தியர்கள் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி மற்றும் மலேசியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட னர். இந்த ஒப்பந்தத்தில் எந்தெந்த விதிகளைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இந்த மாதம் இறுதி செய்யப்படும். இந்த ஒப்பந்தம் வர லாற்றில் ஒரு மைல்கல் என்று இருநாடுகளும் தெரிவித்துள்ளன.