Tuesday, November 15, 2011

இத்தாலி பிரதமர் ராஜினாமா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ரோம்: இத்தாலியில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். பிரதமர் சில்வியோ ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அரசுக்கு கடன் அதிகரித்துள்ளதால் நிலைமை மோசமானது. இதையடுத்து பொருளாதார சீர்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வந்தது. பிரதமர் சில்வியோ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் மக்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சில்வியோ அறிவித்தார். அதிபர் ஜியார்ஜியோ நேபோலி டானோவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு காரில் சில்வியோ வெளியேறினார். அப்போது அதிபர் மாளிகைக்கு வெளியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாட்டு பாடியும் நடனமாடியும் உற்சாகமாக இருந்தனர். சில்வியோ காரில் வெளியில் வந்ததும் அவருக்கு எதிராக Ôபபூன் பபூன்Õ என்று கோஷம் போட்டனர்.
 அவருக்கு பதில் புதிய அரசுக்கு முன்னாள் ஐரோப்பிய கமிஷனர் மரியோ மோன்டி பிரதமராக இன்று தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment