Friday, November 25, 2011

இந்தியாசில்லறை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு

புது தில்லி, நவ. 24: சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
 மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இதில், மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு திரிணமூல் காங்கிரûஸ சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி எதிர்ப்பு தெரிவித்தார்.
 கூட்டணி கட்சியின் எதிர்ப்பையும் மீறி சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
 இதன் காரணமாக ரூ.29.50 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய சில்லறை விற்பனைச் சந்தையில் வால்மார்ட், ஓமன்மெகா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் விரைவில் கடை விரிக்கும். பத்து லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் சுமார் 53 நகரங்களில் அந் நிறுவனங்களின் பல்பொருள் அங்காடி அமைக்கப்படும் என்றும் தெரிகிறது.
 இடவசதியை கருத்திற்கொண்டு நகரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவு வரை அங்காடியை அமைத்துக் கொள்ள எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 மேலும் ஒரு பொருள் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 பா.ஜ.க., இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வியாபாரிகள் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 2,500 மாதிரி பள்ளிகள்: அமைச்சரவைக் கூட்டத்தில், தனியார்- அரசு பங்களிப்பில் 2,500 மாதிரி பள்ளிகளை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படும்.
 தனியார் நிறுவனங்கள் நிலங்களை வாங்கி பள்ளிக்கான கட்டடங்களை கட்ட வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு மாதிரி பள்ளியிலும் 2,000 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதில் மத்திய அரசு சார்பில் 980 மாணவர்களும், மீதமுள்ள இடங்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சார்பிலும் நிரப்பப்படும்.

No comments:

Post a Comment