Friday, November 18, 2011

5 நோய்க்கு ஒரே தடுப்பூசி அடுத்த மாதம் தொடக்கம்!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தமிழகம், கேரளாவில் 5 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் பி.கே.பிரதான் கூறியதாவது: ஜெனீவாவை சேர்ந்த தடுப்பூசிகளுக்கான உலக கூட்டமைப்பு (காவி), 5 நோய்களை தடுக்கும் ஒரே தடுப்பூசியை இந்தியாவுக்கு இலவசமாக வழங்குகிறது. ரூ.765 கோடி மதிப்புள்ள தடுப்பூசியை 3 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. இவை 10 மாநிலங்களில் பயன்படுத்தப்படும். அடுத்த மாதம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக தடுப்பூசி போடுதலில் சிறப்பாக செயல்படும் தமிழகம் மற்றும் கேரளாவில் திட்டம் தொடங்கப்படுகிறது. 

இரு மாநிலங்களிலும் முதல் ஆண்டில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 10 டோசாக அளிக்கப்படும். முதல் ஆண்டில் 50 லட்சம் டோஸ் தேவை. குஜராத், கர்நாடகா, அரியானா, கோவா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த மாநிலங்களில் தடுப்பூசியை கையாளும் திறனை ஆய்வு செய்த பின்னர், அவர்கள் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். 
இவ்வாறு பிரதான் கூறினார்.

ஐந்து நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை அறிமுகப்படுத்த, கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப பரிந்துரை குழு சிபாரிசு செய்தது. டிப்தீரியா, பெர்டூசிஸ், டெட்டனஸ், மஞ்சள் காமாலை, மூளை காய்ச்சல் ஆகிய நோய் தடுப்பாற்றலை இந்த தடுப்பூசி அளிக்கும்.

No comments:

Post a Comment