நிறைவு பெற்றது "சார்க்' மாநாடு: முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேறின
First Published : 12 Nov 2011 12:00:00 AM IST
மாலத்தீவு மராதூ பகுதியில் இந்திய நினைவுச்
சின்னத்தை திறந்து வைத்துப் பார்வையிடும் பிரதமர் மன்மோகன் சிங், அவரது
மனைவி குருசரண் கெüர்.
அட்டு
(மாலத்தீவு), நவ. 11: தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு
அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு, வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. இதில் பல
முக்கியமான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.8
நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடு மாலத்தீவுகளின் அட்டு நகரில் வியாழக்கிழமை
தொடங்கி இருநாள் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான்
பிரதமர் யூசுப் ரஸô கிலானி, இலங்கை அதிபர் ராஜபட்ச, நேபாள பிரதமர் பாபுராம்
பட்டராய், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், மாலத்தீவுகள் அதிபர்
முகமது நசீத் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதில்
தெற்காசிய நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள்
மேற்கொள்ளப்பட்டன. முக்கியமாக வர்த்தகத்தில் வரியல்லாத பிறதடைகளையும், உபரி
வரிகளையும் நீக்குவது, தடையற்ற வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பான
ஒப்பந்தங்கள் நிறைவேறின.மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் மாநாட்டை நடத்திய நாடான மாலத்தீவுகளின் அதிபர் நசீத் இதனை அறிவித்தார். நமது
உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக, வரியல்லாத பிற தடைகளை
நீக்குவது, உபரி வரிகளைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது
அவசியம். இது தொடர்பாக சார்க் நாடுகளின் அமைச்சர்கள் குழு தொடர்ந்து
முயற்சிகளை மேற்கொள்ளும்.வளர்ச்சி குறைந்த நாடுகளுடனான
வர்த்தகத்தில் வரிவிதிப்பு தடைகளை பெருமளவில் குறைப்பதாக இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங் அறிவித்தார். இதனை வரவேற்கிறோம்.உறவுப் பாலம்
அமைப்போம் என்ற மையநோக்குடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், சார்க் நாடுகளிடையே
மூலதன பரிமாற்றத்தை அதிகரிப்பது தொடர்பாக நிதியமைச்சர்கள் அடிக்கடி
சந்தித்துப் பேசுவது என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிராந்திய
ரயில்வே ஒப்பந்தம், மோட்டார் வாகன ஒப்பந்தம் ஆகியவற்றில் தொடர்ந்து
நடவடிக்கை மேற்கொள்ளவும், தெற்காசிய அஞ்சல் அமைப்பை ஏற்படுத்தவும்
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள்
ஏற்படும்போதும், கடற்கொள்ளை போன்ற அசம்பாவிதங்களின் போதும் ஒருவருக்கொருவர்
உதவிக் கொள்ளவும், விரைவில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம்
இயற்றப்பட்டுள்ளது என்று நிறைவு உரையில் மாலத்தீவு அதிபர் நசீத்
தெரிவித்தார்.இப்போது நடைபெற்றது 17-வது சார்க் மாநாடு. அடுத்த மாநாடு நேபாளத்தில் 2012-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment