இந்தியா-இந்தோனேசியா இடையே உடன்பாடு
இந்தோனேசியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அந்நாட்டு அதிபர் சுசிலோ பாம்பங் யுதொயோனோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தோனேசியாவுடன் பல்வேறு துறைகளில் உறவை மேம்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மேலும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும் பல்வேறு துறைகளில் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும். 2010-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே 10 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் அதிகரிக்கும். அறிவி யல், தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்ட வி‘யங்களையும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். வேளாண்மை, விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக இருநாடு களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது இந்த ஒப்பந்தத்தில் பல புதிய வி‘யங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை ஆராய்ச்சி, தோட்டக்கலை துறை, வேளாண் பொருள் விற்பனை, நிலம், நீர் மேலாண்மை, உயிரித் தொழில்நுட்பம் போன்ற வி‘யங்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதற்கு முன் இது தொடர்பான ஒப்பந்தம் 1992-ம் ஆண்டில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-ரஷ்யா இடையே 10 ஒப்பந்தங்கள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் மெட்வடெவ் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இருநாடுகளும் செய்து கொண்ட 10 ஒப்பந்தங்களில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதலாக 4 அணுஉலை களை ரஷ்யா கட்டித் தருவது, மற்ற அணுமின் நிலையங்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, 80 எம்.ஐ-17 ஹெலிகாப்டர்கள் வழங்குவது, விண் வெளி ஆராய்ச்சிக்கு உதவி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு உதவி, சுற்றுலா மற்றும் கலாசார வளர்ச்சிக்கு உதவுவது, சுங்க இலாகா, வர்த்தகம் உள்ளிட்டவை அடங்கும். மேலும் 2010-ம் ஆண்டுவாக்கில் இருநாடுகளும் வர்த்தக உறவை 10 பில்லியன் டாலருக்கு உயர்த்த முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக் கவும் இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. மொத் தத்தில் இருநாடுகளும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தங்கள் மூலம் இருநாடுகளின் உறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-கஜகஸ்தான் இடையே அணுசக்தி உடன்பாடு
உலகிலேயே அதிகமாக யுரேனியம் வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் 2-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானுடன் இந்தியா விரைவில் அணுசக்தி உடன்பாட்டை மேற்கொள்ள உள்ளது. இந்தியா வின் வரும் குடியரசு தினவிழாவில் கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸரபயேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். அவரது இந்த வருகையின் போதே இருநாடுகளுக்கு இடையே யான அணுசக்தி உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 3 நாடுகளுடனும் இந்தியா ஏற்கெனவே அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கஜகஸ்தானுடன் இந்தியா அணு சக்தி உடன்பாட்டை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் தானியங்கி அடையாளம் காணும் கருவி
கடல்பரப்பில் நடமாடும் சந்தேகத்துக்குரிய கப்பல்களையும், படகுகளையும் அடையாளம் காண உதவும் டிரான்ஸ்பான்டர் கருவியை இஸ்ரோ தயாரித்துள்ளது. இஸ்ரோ தயாரித்துள்ள இந்தக் கருவிக்கு தானியங்கி அடையாளம் காணும் கருவி (ஆன்ற்ர்ம்ஹற்ண்ஸ்ரீ ஒக்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) என்று பெயர். இது கனடா நாட்டு உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் வரும் கப்பல் எந்த அளவில், எந்த வடிவில் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைத் துல்லிய மாக அறிய இது உதவும். கப்பலை அடையாளம் காண்பது மட்டும் அல்ல, அந்தக் கப்பலுக்கும் பிற கப்பல்கள் அல்லது துறைமுகங்களுக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை அறிந்து கொள்ளவும் இது உதவும். மேலும் இந்தியக் கடற் பரப்பில் இருப்பவை இந்தியக் கப்பல்களா, வெளி நாட்டுக் கப்பல்களா, நட்பு நாடுகளின் கப்பலா, எதிரி நாடுகளின் கப்பலா, வழக்கமான பயணிகள் போக்கு வரத்து-சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றுக்குப் பயன்படும் கப்பல்களா அல்லது சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படும் கப்பலா என்றெல் லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment