Friday, November 18, 2011

பாலூட்டும் பெண்களுக்கு, ரூ.1000 வழங்கும் திட்டம் நாடு முழுதும் விரிவாக்கம்!

 பாலூட்டும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் விரிவுப்படுத்தி உள்ளது. இது பற்றி மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில் மாற்றங்கள் செய்வதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் உயர்குழு அமைக்கப்பட்டு இருந்தது. கிராமப்புற மக்கள் 75% பேருக்கும், நகர்ப்புற மக்கள் 50 சதவீதம் பேருக்கும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க இந்த குழு கடந்த ஜூலையில் ஒப்புதல் வழங்கியது. 

இந்த நிலையில், இந்த நகல் மசோதாவில் மாற்றங்கள் செய்வது பற்றி மாநில அரசுகள் மற்றும் பல்வே று அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், மானிய விலையில் மக்களுக்கு உணவு தானியங்களை 3 கிலோவுக்கு அதிகமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த சலுகையை பாலூட்டும் தாய்மார்கள், ஆதரவற்றவர்கள், 
முதியோர்களுக்கு கிடைக்கவும்,

குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது 52 மாவட்டங்களில் மட்டும் அமலில் உள்ளது. இது நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது.  இவ்வாறு கே.வி.தாமஸ் கூறினார்.

No comments:

Post a Comment