ஆசிய - பசிபிக் மாநாடு : ஒபாமா தொடங்கினார்!
ஹொனோலு: ஆசிய - பசிபிக் நாடுகளின் மாநாட்டை ஹவாய் தீவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று தொடங்கி வைத்தார். இதில் 21 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த 1993ம் ஆண்டு ஆசிய - பசிபிக் நாடுகள் மாநாட்டை அமெரிக்கா நடத்தியது. அதன்பின் இப்போதுதான் இந்த மாநாட்டை ஹவாய் தீவில் நடத்துகிறது. மாநாட்டை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொடங்கி வைத்தார். இதில் ஆசிய - பசிபிக் பகுதிகளை சேர்ந்த 21 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து ஒபாமா பேசுகையில், ÔÔஆசிய-பசிபிக் பகுதிகளில் வாழும் மக்கள், பொருளாதார வளர்ச்சிக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இந்த மாநாடு மூலம் நமக்கு கிடைத்துள்ளது. வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாடு குறித்து இந்த மாநாட்டின் முடிவில் பயனுள்ள முடிவுகளை எடுக்க வேண்டும்ÕÕ என்று கூறினார்.
No comments:
Post a Comment