Tuesday, November 15, 2011

தமிழகம்




இணையத் தளம் மூலம் மின் கட்டணம்

சென்னையில் இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி வங்கிகள் உதவியுடன் அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. அதன்படி, ஆன்- லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி உதவியுடன் சென்னையில் எந்த நேரமும் பணம் கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. மேலும் இந்த சேவையில் ஐசிஐசிஐ, இந்தியன் வங்கிகளும் பங்கு கொண்டுள்ளது. தற்போது கும்மிடிப் பூண்டி முதல் மரக்காணம் வரை பயனடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் 

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி 

சென்னை அருகே உள்ள நெமிலியில் அமைக்கப்பட வுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது ரூ.908 கோடி மதிப்பிலானதாகும். அதோடு, இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.871.24 கோடி நிதியளிக்கவுள்ளது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கத் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம், கூடுதலாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.இந்த திட்டம் இன்னும் இரு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்திரயான் திட்ட இயக்குநருக்கு டாக்டர் பட்டம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 151-வது பட்டமளிப்பு விழாவில் சந்திரயான் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

திருமங்கலம் இடைத்தேர்தல்

திருமங்கலம் தொகுதி மதிமுக எம்எல்ஏ வீர. இளவரசன் மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம் உள்பட 26 போர் போட்டியிட்டனர். தமிழக தேர்தல் வரலாற்றில் சாதனையாக 88.78 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் லதா அதியமான் 39,266 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை வெற்றிக் கண்டார். மேலும் இத்தொகுதியில் 1991-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் சாமிநாதனை 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே இத்தொகுதியில் சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-மலேசியா இடையே ஒப்பந்தம்

இந்தியாவும், மலேசியாவும் தொழிலாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் சட்ட ரீதியாக தங்கியிருக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் வெளி நாடு வாழ் இந்தியர்கள் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி மற்றும் மலேசியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட னர். இந்த ஒப்பந்தத்தில் எந்தெந்த விதிகளைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இந்த மாதம் இறுதி செய்யப்படும். இந்த ஒப்பந்தம் வர லாற்றில் ஒரு மைல்கல் என்று இருநாடுகளும் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment