நேபாளத்தில் பறவை காய்ச்சல்
ஐ5ச1 ரக பறவை காய்ச்சல் கிருமி நேபாளத்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. நேபாள அரசு, கிழக்கு பகுதியிலுள்ள ஜாபா மாவட்டத்தை, பறவை காய்ச்சல் பாதித்த அவசர நிலைமை பிரதேசமாக அறிவித்தது. இதுவரை, பறவை காய்ச்சல் தொற்று கொண்ட மக்கள் கண்டறியப் படவில்லை. ஆனால் இப்பிரதேசத்திலுள்ள மக்களின் உடல் நிலைமையை கண்காணிக்கும். இப்பறவை காய்ச்சல் கிருமிகளை நீக்க, சில காலம் பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்தது.
இஸ்ரேல் - ஹாமாஸ் போர்நிறுத்தம்
இஸ்ரேல் காசா பகுதியில் குண்டுகளை வீசியதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு ஏராளமானவர்கள் படுகாயமடைந் தனர். உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்து போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தி வந்தன. அதைனை ஏற்று போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை முற்றிலும் நிறுத்தியதையடுத்து தாங்களும் போர்நிறுத்தம் செய்வதாக ஹமாஸ் இயக்கமும் அறிவித்தது.
இலங்கை அரசுக்கு ஐ.நா.சபை கண்டிப்பு
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அப் பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டித்துள்ளது. இது குறித்து ஐ.நா. அகதிகள் அமைப்புக்கான ஆணையர் ரோன் ரெட்மாண்ட் கூறியதாவது: “”இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ஏராளமான பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்தோ, அல்லது காணாமல் போயுள்ளனர். இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். போரில் ஏதுமறியாதவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும். போர் காரணமாக வெளியேறிய சுமார் இரண்டு லட்சம் மக்கள், மீண்டும் திரிகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் குடியேறத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய வசதிகள், போதிய பாதுகாப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அகதிகளில் 1,500 பேர், 2008 ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.இத்தகைய சாதகமான போக்கு இவ்வாண்டும் தொடர வேண்டும்’’ என்று ஐ.நா. ஆணையர் ரோன் ரெட்மாண்ட் தெரிவித் துள்ளார்.
வங்கதேசத்தில் புதிய அரசு
வங்கதேச நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், ú‘க் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து ú‘க் ஹசீனா தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது. தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த கோலாகலமான விழாவில், வங்கதேச பிரதமராக ú‘க் ஹசீனா பதவி ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 31 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.
அமெரிக்கா-இந்தியா இடையே ஒப்பந்தம்
கடலோரக் காவலை வலுப்படுத்த 8 விமானங் களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கடல் மார்க்கமாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பது தெரியவந்ததால் கடலோரக் காவலை மேலும் வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு கடற்படைக்கு உதவியாக 8 விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. பி-81 ரக விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்குவதென முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க நிறுவனத் துடன் மிகப்பெரிய தொகைக்கு விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். புதிதாக வாங்கப்படும் விமா னங்களில் கப்பலைத் துளைக்கும் டார்பிடோ குண்டுகள், கப்பல் ஏவுகணைகளை முறியடிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களும் இருக்கும். இது தவிர நீர்மூழ்கியை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment