உசைன் போல்ட்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ரீபாக் கிராண்ட் ப்ரீ தடகளப் போட்டியில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தூர ஒட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை 9.72 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2007_ல் இத்தாலியின் ரீட்டி நகரில் நடந்த தடகள போட்டியில் ஜமைக்கா வீரர் அசபா பாவெல் 9.74 வினாடி களில் 100 மீட்டர் தூரத்தை கடந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
சில்வியோ பெர்லுஸ்கோனி
இத்தாலி நாட்டின் மிகப் பெரிய தொழில் அதிபராக விளங்கி வருபவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் ஏற்கனவே இரண்டு முறை அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தவர். தற்போது நடந்த பார்லிமெண்ட் தேர்தலிலும், அவரது கட்சியே வெற்றி பெற் றது. இதையடுத்து மூன்றாவது முறையாக இத்தாலி நாட்டின் பிரதமராக சில்வியோ பெர் லுஸ்கோனி பதவியேற்றார்.
பி.வி. நாயக்
இந்திய விமானப் படையின் புதிய தலைவராக ஏர் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் தற்போது இந்திய விமானப் படையின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். விமானப் படையின் தற்போதைய தலைவர் ஃபாலி ஹோமி மேஜர், வரும் மே மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதைத் தொடர்ந்து பி.வி.நாயக் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
No comments:
Post a Comment