Sunday, December 4, 2011

பொருளாதாரம




உலக பணக்காரர்கள் பட்டியல்

உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முத லிடத்தில் முகேஷ் அம் பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபரு மான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது. மேலும் 1,950 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் ஏழாவது பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.

நாட்டில் தனியார் முதலீடு அதிகரிப்பு

நம் நாட்டில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எவேல்யூசெர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு மேற்கொள்ளப்படும் தனிநபர் பங்கு முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.80,000 கோடி என்ற அளவில் இருக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலை சூழல் பற்றிய சர்வதேச சர்வே

கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டாயிரம் இந்திய ஊழியர்கள் உள்பட மொத்தம் எழுபதாயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய ஊழியர்களில் 70% பேர் தாங்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள் ளார்கள். ஊழியர்களின் திருப்தியில் இந்தியா 7_வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா--துபை இடையே வர்த்தகம் உயர்வு

இந்தியா--துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002_ம் ஆண்டில் இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் இடையிலான வர்த்தகம், துபை மூலமே நடக்கிறது. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளிடையேயான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். துபைக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.

அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு

கடந்த ஜனவரி மாதத்தில் நம் நாட்டில் 273 கோடி டாலர் மதிப்பிற்கு அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரடி முதலீட்டை விட (176 கோடி டாலர்) 55 சதவீதம் அதிகமாகும். ஆனால் அதற்கு பிறகு அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு தீவிரமடைந்ததால், நம் நாட்டில் அன்னிய நேரடி முதலீடு குறைந்துபோனது. இந்த நிலையில் சென்ற ஜனவரி மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு அதிகளவில் வந்துள்ளது என்பது அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment