Sunday, December 4, 2011

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிபுதிய மகப்பேறு திட்டம்



டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 6 ஆயிரம் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் இதுவரை வழங்கப்பட்டது.  
இந்த உதவித் தொகையை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி இந்த திட்டத்தை தலைமை செயலகத்தில் ஜெயலலிதா தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கினார்.  
இதைத் தொடர்ந்து இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் 10-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ. 313 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1-6-2011-ல் இருந்து அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தும் வகையில் தாய்மார்களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது.  
பிரசவித்த தாய்மார்கள், 7-வது மாதத்தில் உள்ள கர்ப்பிணிகள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு முடித்தவர்கள் என 3 பிரிவினரையும் தேர்வு செய்து நிதி வழங்குகிறார்கள். இதை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment