Sunday, December 4, 2011

விருதுகள்




கிரீன் ஆஸ்கார்ஸ் விருது

கழிவுப் பொருட்களைக் கொண்டு எரி பொருளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லண்டனில் ஆண்டுதோறும் கிரீன் ஆஸ்கார்ஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விருது கேரளாவைச் சேர்ந்த பையோடெக், கர்நாடகாவைச் சேர்ந்த செல்கேர் மற்றும் எஸ்.கே.ஜி.சங்கர் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த மூன்று இந்திய நிறுவனங்களுக்கும் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோர் கிரீன் ஆஸ்கார்ஸ் விருதுகளை வழங்கினார்.

ஆஸ்கார் விருதுகள்

திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப் படுவது ஆஸ்கார் விருதாகும். ஆஸ்கார் விருதின் 81-—வது விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கோடாக் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டன. இந்த படத்துக்கு சிறப்பாக இசையமைத்த இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் ஆகிய இரண்டு பிரிவுகளில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஒலி சேர்ப்புக்கான விருது கேரளத்தைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டிக்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விருது

மேகாலயத்தில் பெண்கள் மத்தியில் பணிபுரிந்து வரும் சமூக சேவகிகள் இருவருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் குழந்தைகள் கடத்தலைத் தடுப்பதற்கு முழுமையான ஒருமுறையை உருவாக்கியதற்காக ஹசீனா கர்பி என்பவருக்கும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும் சகோதரி ஜுடித் ஷதாப் என் பவருக்கும் யுனானிமா என்ற சர்வதேச அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் ஆசியர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment